கொழும்பில் விருந்து நடந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் - 21 பேர் அதிரடியாக கைது
கொழும்பின் புறநகர் பகுதியில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கடுவெல, வெலிவிட்ட பகுதியில் நடந்த விருந்தின் போது 21 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
போதைப்பொருள்
இதன்போது சந்தேக நபர்கள் நாட்டிற்கு வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் 22 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள் என்று கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.




