ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இரு அரச வங்கிகளுக்கு 71621 மில்லியன் கடனை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இரண்டு அரச வங்கிகளுக்கு 71621 மில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாக தெரியவருகிறது.
தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறுகிய கால நிதி தேவைக்காக இரண்டு பிரதான அரச வங்கிகளிடமிருந்தும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடன் பெற்றுக் கொண்டுள்ளது.
கடந்த 2016 - 2017ம் ஆண்டுகளில் மத்திய வங்கியின் பிணையின் அடிப்படையில் 31115 மில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பெறப்பட்டுள்ள கடன்
மேலும் 2017 - 2018ம் ஆண்டுகளில் ஶ்ரீலங்கன் நிறுவனம் இந்த அரச வங்கிகளிடமிருந்து 29439 மில்லியன் ரூபா கடனாக பெற்றுக் கொண்டுள்ளது.
2020 - 2021ம் ஆண்டுகளிலும் இந்த இரண்டு வங்கிகளிலிருந்தும் 75 மில்லியன் டொலர் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.