ஜனாதிபதியின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம்! அடுத்த வாரம் ஆரம்பமாகும் விவாதம்
ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
விவாதம்
இந்த தீர்மானம், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வில், மு.ப. 11.30 முதல் பி.ப. 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்று, 22 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாள் விவாதத்துக்காக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனவரி 21 ஆம் திகதி நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாய்மூல விடைக்கான வினா
அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்தே ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
