யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் விவாதப் போட்டி
தமிழறிஞரும் யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய க. சிவராமலிங்கம்பிள்ளையின் நூற்றாண்டையொட்டி வடமாகாணப் பாடசாலைகளிடையே விவாதச் சுற்றுப்போட்டி ஒன்றை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது.
இப்போட்டியில் பங்குபற்றும் ஆர்வமுடைய பாடசாலைகள் போட்டியாளர், முழுப்பெயர், பொறுப்பாசியர் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறிப்பிட்டு தமது பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் எதிர்வரும் 08.11.2025 இற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக பொதுச் செயலாளர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், இல 28, குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கச் செயலாளர் கோரியுள்ளார்.
நவம்பர் மாத இறுதியில்
மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் போட்டி இணைப்பாளர் தெ. ஹர்சனை 0759556041 / 0767556041 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகளின் சுற்றுநிருபத்தைத் தழுவிய நிலையில் நவம்பர் மாத இறுதியில் போட்டிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri