யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பிரிவை தாங்காது மனைவி எடுத்த தவறான முடிவு!
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி உயிரை மாய்க்க முனைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்றையதினம் (24) உயிரிழந்துள்ளார்.
புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி
குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில், உறவினர்கள் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
இந்நிலையில் கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் மனைவி தவறான முடிவெடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam