இலங்கையில் பேரிடர் மரணங்களின் எண்ணிக்கை 607 உயர்வு
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உயர்வடைந்துள்ளது.
மழை வெள்ளம், புயல் மற்றும் மன்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தங்களினால் இதுவரையில் 67 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த அனர்த்தங்கள் காரணமாக இன்னமும் 214 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்த மரணங்கள்
இந்த மரணங்களில் கண்டி மாவட்டத்தில் மட்டும் 232 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்டத்தில் 83 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மலை நாட்டை அண்டிய பகுதிகளில் அதிக அளவு மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திட்வா புயல் காரணமாக நாடு முழுவதும் சுமார் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பேரணர்த்தம் காரணமாக சுமார் 4000 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும், சுமார் 70 ஆயிரம் வீடுகள் பகுதிளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.