கொழும்பு சிறைச்சாலை அதிகாரிக்கு கொலை மிரட்டல்
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறை அதிகாரி ஒருவரை அடையாளம் தெரியாத மூன்று ஆயுததாரிகள் தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்கள்.
மினுவாங்கொடையில் குறித்த அதிகாரியின் வீட்டில் நேற்றையதினம்(12.05.2023) இந்த கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரியின் மினுவாங்கொடை இல்லத்திற்கு முகத்தை மறைத்த ஆயுததாரிகள் சென்றுள்ளனர். போதைப்பொருள் கடத்தலை யாராலும் தடுக்க முடியாத நிலையில், "சிறைச்சாலையில் ஹெராயினை நிறுத்துவதற்கு முயலவேண்டாம்" என சிறை அதிகாரியை ஆயுததாரிகள் அச்சுறுத்தியுள்ளனர்.
அதிகாரியின் தாயாருக்கு தாக்குதல்
இதன்போது அதிகாரியின் தாயார் தாக்கப்பட்டதாகவும், ஆயுததாரிகள் அவரது சகோதரியின் தொலைபேசியை தரையில் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீட்டை விட்டு வெளியேறும் முன் குறித்த குழுவினர் சிறை அதிகாரியை மண்டியிட செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் மினுவாங்கொடை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
