ஹர்ச டி சில்வா மீதான விசாரணையை கைவிட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா (Harsha de Silva) மீதான மரண அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணையை குற்றவியல் புலனாய்வு துறை கைவிட்டுள்ளது.
அத்தகைய விசாரணை தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதை அடுத்து இந்த விசாரணை இடைநிறுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறப்புரிமை பிரச்சினை
முன்னதாக இணைய விசா தொடர்பில் நாடாளுமன்றக் குழுவின் ஊடாக விசாரணைகளை நடத்தவேண்டாம் என்று கூறி ஹர்சவுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்றில் சிறப்புரிமை பிரச்சினை எழுப்பப்பட்டது.
இதனையடுத்து இதனை விசாரணை செய்யுமாறு பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையிலேயே விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |