மன்னார் சர்ச்சைக்குரிய தாய் - சிசு மரணம் : நடவடிக்கை எடுக்க ரவிகரன் எம்.பி உறுதி
மன்னார் (Mannar) பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசு விவகாரம் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
மன்னார் - பட்டித்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு நேற்றையதினம் (24) சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், குடும்பத்தினருக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், இடம்பெற்ற துயரச்சம்பவம் தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்து கொண்டார்.
நீதியைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை
அத்தோடு மன்னார் மாவட்ட செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயத்தின் நிலை தொடர்பிலும் கேட்டறிந்ததுடன், குறித்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நீதியைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்திருந்தார்.
இதன்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டவர்களும் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri