வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு பணிக்கப்பட்ட தாய் உயிரிழப்பு : குடும்பத்தினர் கவலை

Jaffna Hospitals in Sri Lanka Northern Province of Sri Lanka
By Theepan Dec 02, 2023 06:35 PM GMT
Report

இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால், நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா (வயது 25) என்ற இளம் தாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த தாயின் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,

“விதுசா, கடந்த 21ஆம் திகதி குழந்தை பேறுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை

வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட தாய்

அன்றைய தினமே சத்திர சிகிச்சை மூலம் இரண்டு குழந்தைகளை பெற்ற பின்னர் 25ஆம் திகதி சனிக்கிழமை தாய்க்கு அம்மை நோய் தொற்று அறிகுறிகள் காணப்படுவதாக கூறி சில மருந்துகளை எழுதி தந்தனர்.

அவற்றை வாங்கி கொடுக்குமாறும், அம்மை நோயுடன், வைத்தியசாலை விடுதியில் வைத்திருக்க வேண்டாம் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் எனவும் வைத்தியர்கள் பணித்தனர்.

வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு பணிக்கப்பட்ட தாய் உயிரிழப்பு : குடும்பத்தினர் கவலை | Death Of A Mother Who Died After Given Birth

காலையில் தாய்க்கு இரத்த அழுத்தம் இருப்பதாக கூறிய வைத்தியர்கள், மாலை 5 மணிக்கு தாயையும் பிள்ளையையும் அழைத்து செல்லுமாறு பணித்ததால், நாம் வீட்டிற்கு அழைத்து சென்றோம்.

வீடு வந்த பின்னர் தாய் மிக சோர்வாக, பலவீனமாக காணப்பட்டார். பிள்ளைகளுக்கு பாலூட்டவோ, அவர்களை அரவணைக்கவோ முடியாத அளவுக்கு தாயின் உடல் பலவீனமாக இருந்துள்ளது.

அதனால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரிடம் காட்டிய போது, உடனடியாக நீங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று தங்கி நின்று சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர் கூறினார்.

சிறுநீரகத்தில் கிருமி தொற்று

ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தோம். சிறுநீர் பரிசோதனையை தனியார் ஆய்வு கூடத்தில் செய்து வருமாறு வைத்தியசாலையால் கூறப்பட்டது.

பரிசோதனை செய்து கொடுத்த பின்னர் இரவு 12 மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு பணிக்கப்பட்ட தாய் உயிரிழப்பு : குடும்பத்தினர் கவலை | Death Of A Mother Who Died After Given Birth

மறுநாள் திங்கட்கிழமை காலை, தாயின் சிறுநீரகத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு உள்ளமையால், உடல் உறுப்புக்கள் பழுதடைந்து செல்கின்றன என தெரிவித்தனர்.

மீள சிறுநீர் பரிசோதனை செய்து வருமாறு திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மீண்டும் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிறிது நேரத்தில் மாலை 4.45 மணியளவில் தாயை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்தனர்.

வைத்தியசாலை பணிப்பாளரிடம் நடந்த அனைத்து விடயங்களையும் கூறி முறையிட்டோம். விசாரணைகளை ஆரம்பிப்பதாகவும், பிரசவம் நடந்து 48 நாட்களுக்குள் தாய் உயிரிழந்து உள்ளமையால் முழுமையான விசாரணை நடத்தப்படும் என நம்பிக்கை தந்து அனுப்பி வைத்தார்.

மரண விசாரணை அதிகாரி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களுடன் நடந்து கொண்ட விடயம் அவர்களின் அணுகு முறை என்பனவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்திருந்தது.

மேலதிக விசாரணைகள்

ஒரு பொலிஸ் அதிகாரி தானாகவே, இது ஒரு போதனா வைத்தியசாலை இங்கே கவனயீனம், வைத்திய தவறுகள் நடக்க சாத்தியமில்லை என கூறினார்.

எம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ளவோ, எம் தரப்பு கருத்தை கேட்கவோ அவர் விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட எமது குரலை அடக்கவே முயன்றார்.

வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு பணிக்கப்பட்ட தாய் உயிரிழப்பு : குடும்பத்தினர் கவலை | Death Of A Mother Who Died After Given Birth

சடலத்தை அடையாளம் காட்டி குறிப்புக்களை சொல்லும் போதும் பொலிஸ் அதிகாரி அருகில் வரரமல் தூர நின்றே குறிப்பெடுத்தார்.

அதன் போது பிரேத அறையில் இருந்த ஊழியர்கள் அருகில் வந்து சடலத்தை பார்த்து குறிப்பெடுங்கள் என அழைத்த போது, ஊழியர்களை மிரட்டி, தான் அருகில் வர தேவையில்லை என்றார்.

சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திசாலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கூறிய போது, அவரும் அது தொடர்பில் பணிப்பாளரிடம் முறையிடுங்கள், மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றியே தான் அறிக்கை தர முடியும் என்றார்.

சடலத்தை மீள சோதனை செய்ய வேண்டி வருமா என சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது, தேவையான மாதிரிகள் எடுத்து விட்டோம். உங்கள் சமய வழக்கப்படி இறுதிக் கிரியைகளை நடத்துங்கள்” என கூறினார்.

இன்று தாய் இல்லாமல் இரு பிள்ளைகளும் தவித்து வருகின்றன. வைத்தியசாலையில் இருந்து தாயையும் பிள்ளையையும் உடனே அழைத்து செல்லுங்கள் என கூறியதால் தான், உரிய சிகிச்சைகள் இன்றி தாய் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என கோரியுள்ளனர். 

தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை!

தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை!

வற் வரி 24 சதவீதமாக அதிகரிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

வற் வரி 24 சதவீதமாக அதிகரிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US