சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை
உள்ளுர் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மரக்கறி வியாபாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையகம் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக உள்ளூர் சந்தையில் தேவைக்கேற்ப மரக்கறிகள் இல்லாததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்கறிகளின் விலை
இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சு ரூ.600/=, கரட் ஒரு கிலோ ரூ.450/=, கத்திரிக்காய் ரூ.300/=, தக்காளி ரூ.480/=, மிளகாய் ரூ.700/=, பச்சை மிளகாய் ரூ.1500/=, குண்டு மிளகாய் ரூ.2000/=லீக்ஸ் ரூ 280/= என அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோ ரூ 400-500 வரை உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளதால், அன்றாட தேவைக்காக குறைந்த அளவே காய்கறிகளை வாங்குவதாக நுகர்வோர் குறிப்பிட்டுனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
