நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு
நேபாளத்தின் இமயமலைப் பிராந்தியத்தில் இடம்பெற்ற பேரழிவுமிக்க பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐக் கடந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து, நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பேரழிவு
இந்த அனர்த்தத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயுள்ளதுடன், நீர்மின் நிலைய சுரங்கப் பாதைகளுக்குள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பொருட்டு சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த நிபுணத்துவ மீட்புக் குழுவினர் கனரக இயந்திரங்கள் மற்றும் உலங்குவானூர்திகளை பயன்படுத்தி தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புவிவெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவே இத்தகைய பேரழிவுக்கு முதன்மை காரணம் என சுட்டிக்காட்டியுள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை அரசாங்கம் முன்னுரிமையளித்துச் செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.