22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்! பிரதம நீதியரசர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பம்
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
இந்த மனுக்கள்,பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஆயத்தின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்
இந்த சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், நீதித்துறை சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணைகளை நீதிமன்ற அறை 501க்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க அரங்கில் அழைக்கப்பட்டிருந்த போது, 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்குள் போதிய இடவசதி இன்மையால், அதனை 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. .
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15