தொடருந்தில் மோதுண்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்று(28.09.2025) மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த W.M.A. சரத் அந்தோனி (வயது-60) என தெரிய வந்துள்ளது.
கொழும்பு நோக்கி பயணம்
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று(28) காலை பயணித்த குறித்த தொடருந்து காலை சௌத்பார் தொடருந்து நிலையத்தில் தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.
இதன் போது சௌத்பார் - தள்ளாடி தொடருந்து வீதி, இரட்டை கண் பாலத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



