வவுனியா பொது வைத்தியசாலை – மலர்சாலை டீல்: வைத்தியசாலையில் இருந்து செல்லும் பிணங்கள்
வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகரின் மலர்சாலைக்கு உறவினர்களுக்கு தெரியாமல் வைத்தியசாலையில் இருந்து பிணங்கள் கொண்டு செல்லப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணிப்பவர்களின் உடல்களை சுத்தம் செய்து பெட்டியில் ஈடுவதற்காக உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக வைத்தியசாலையில் உள்ள சிற்றூழியர் இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மலர்சாலை
சிலர் தாமே சடலத்தை வைத்தியசாலையில் இருந்து விடுவித்து வைத்தியசாலை முன்பாக உள்ள அரசியல்வாதி ஒருவரின் மலர்சாலையில் உடலை ஒப்படைத்து விட்டு பணம் செலுத்துவதற்கான சிட்டைகளை உறவினர்களிடம் கையளித்து வருகின்றனர்.
சிலர் குறைந்த விலையில் அதன் அருகில் உள்ள அல்லது வேறு மலர்சாலைகளுடன் தொடர்பு கொண்டு சடலத்தை கொண்டு செல்வதற்கு சென்ற போதும் சிற்றூழியர் அவர்களுக்கு தெரியாமல் சடலத்தை அரசியல்வாதியின் மலர்சாலையில் ஒப்படைப்பதுடன், மற்றைய மலர் சாலைகளை விட அதிக பணமும் பெறப்படுவதாக குற்றம சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சிற்றூழியருக்கு வழங்கப்படும் சன்மானத் தொகையும் உள்ளடங்குவதால் அதிக பணம் அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அருகில் உள்ள வேறு மலர்சாலையினர் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருக்கு தெரிவித்த போதும் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இந்த செயற்பாடு தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 17 June, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam