ஆடைகளின்றி சித்திரவதை செய்யப்பட்ட சுரேஷ் சலே.. மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தடுப்புக்காவலில் இருந்த போது ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப்புலனாய்வுத் துறையினர் ஏற்றுக்கொண்டதாக சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று(17) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் சுரேஷ் சலே தற்போது வரை உண்ணாவிரதத்தை கைவிடவில்லை எனவும், உண்ணவோ, நீர் அருந்தவோ அவர் தொடர்ந்து மறுத்து வருவதாகவும் சுரேஷ் சலேவின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் உண்ணாவிரதம்
மேலும், தற்போது சலேவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சுரேஷ் சலேவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைகின்றது. அவரால் அமர்ந்திருக்க முடியவில்லை. அவருடைய கை கால்கள் வலுவிழந்துள்ளன. உடல் நிலை மேலும் மோசமடைந்து வருகின்றது. பேசுவதற்கும் அவர் சிரமப்படுகின்றார்” என்றும் அவர் மனைவி தெரிவித்தார்.

ஊசிகளின் மூலமும், சிகிச்சைகள் மூலமாகவும், திரவங்களைச் செலுத்தியும் வைத்தியர்கள் சுரேஷ் சலேவை உயிருடன் வைத்திருக்கின்றார்கள் எனவும் சலேவின் மனைவி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் துறையினரால் தாம் அழைக்கப்பட்டதாகவும், இதன்போது கடந்த நாட்களில் சுரேஷ் சலேவை ஆடைகளை கலைந்து சோதனை செய்ததை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும் சுரேஷ் சலேவின் மனைவி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri