மகனை அடித்துக் கொலை செய்த தந்தை - வீட்டுக்குள் பலியான ஹேமச்சந்திரன்
நுவரெலியா, அம்பேவெலையில் வீடொன்றில் மகனை தடியால் அடித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 30 வயதான சேர்ந்த ராஜ்குமார் ஹேமச்சந்திரன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமணமான மகன் தனது மனைவியைப் பிரிந்து, தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
பணத் தகராறு
மரணமடைந்த மகனுக்கும் சந்தேகநபரான தந்தைக்கும் இடையில் வீட்டில் பணத் தகராறு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தன்று இரவு தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சமையலறையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில், தந்தை மகனை தடியால் தாக்கியுள்ளார்.
நீதவான் விசாரணை
மகன் சுயநினைவின்றி தரையில் விழுந்ததன் பின்னர், மீண்டும் அவரைத் தாக்கி படுக்கையறை கட்டிலில் போட்டதாக தந்தையிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான நீதவான் விசாரணையை வெலிமடை நீதவான் மேற்கொண்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தந்தையிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam