நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: இறுதி சடங்கிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட சடலம்
பொரளை மலர்சாலையில் இறுதி கிரியைகளுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சடலமொன்றை, பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் உயிரிழந்தவரின் மனைவி வழங்கிய முறைப்பாட்டையடுத்து நீதவான் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தனது கணவர் மூன்று மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறி கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்ததாகவும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உயிரிழந்தவரின் மனைவி செய்த முறைப்பாடு செய்துள்ளார்.
பிரேத அறையில் வைக்குமாறு உத்தரவு
இதனையடுத்து, சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பிரேத அறையில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்துக்குரிய மரணம் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த 64 வயதுடைய நபர் சிறுநீரகம் மற்றும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும், உயிரிழந்தவரின் சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்க சடலம் சீல் வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |