தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பிரதேசங்களில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நான்கு இளைஞர்களின் சடலங்கள் தற்போது அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்கள் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கலகொட பிரதேசத்தினை சேர்ந்த பொடி மண்டிஸ் என அழைக்கப்படும் ஹலம்ப உதேஸ் மதுரங்க மற்றும் தடல்லவைச் சேர்ந்த சிதும் சஞ்சனா ஆகிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் ஆறுதல்
பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று உயிரிழந்த கவிஷ்க அஞ்சனாவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam