பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்: சிக்கிய பிரதான சந்தேகநபர்
சப்புகஸ்கந்த பகுதியிலிருந்து அண்மையில் பயணப்பையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான கணவன், மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த பிரதான சந்தேகநபர் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை பிரதான சந்தேகநபரிடமிருந்து, படுகொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் உலக்கை, சடலத்தை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் என்பவற்றை மீட்டுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்தி...
பயணப்பையில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் : கைது செய்யப்பட்டவா்கள் நீதிமன்றில் முன்னிலை
பயணப் பையிலிருந்து சடலம் மீட்பு! காணாமல்போயுள்ள தங்க நகைகள்: அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்
பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? வெளியான புதிய தகவல்
ஆறு வருடங்களுக்குள் பயணப்பொதிகளில் இருந்து மீட்கப்பட்ட மூன்றாவது பெண்ணின் சடலம்: விசாரணை தொடா்கிறது

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
