ஆறு வருடங்களுக்குள் பயணப்பொதிகளில் இருந்து மீட்கப்பட்ட மூன்றாவது பெண்ணின் சடலம்: விசாரணை தொடா்கிறது
கடந்த 6 வருடங்களுக்குள் பயணப்பொதிக்குள் இருந்து மீட்கப்பட்ட மூன்றாவது பெண்ணின் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் இல்லை என்று இலங்கையின் காவல்துறை தொிவித்துள்ளது.
கொழும்பின் புறநகா் சப்புகஸ்கந்தயில் நேற்று பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
ஏற்கனவே 2015, ஜூலை 30 ஆம் திகதி பயணப்பொதிக்குள் இருந்து பெண் ஒருவாின் உடலம், புறக்கோட்டை பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
இதற்கு காரணமானா் கண்டறியப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து இந்த வருடம் மாா்ச் முதலாம் திகதியன்று கொழும்பு புறக்கோடை டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து பெண் ஒருவாின் உடலம் மீட்கப்பட்டது.
இதற்கு காரணமானவர் கண்டறியப்பட்ட நிலையில், அவா் தமது உயிரை தாமே போக்கிக்கொண்டாா்.
இந்தநிலையில் நேற்று உடலமாக மீட்கப்பட்ட பெண் தொடா்பில் தொடா்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையின் பேச்சாளா் குறிப்பிட்டுள்ளாா்.
சப்புஸ்கந்த எாிபொருள் சுத்திகாிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் இருந்தே இந்த பயணப்பொதி கண்டுபிடிக்கப்பட்டு பெண்ணின் உடலம் மீட்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட பெண், 30 -40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்றும் சுமாா் 5 நாட்களுக்கு முன்னா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையின் பேச்சாளா் தொிவித்தாா்.