பயணப்பையில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் : கைது செய்யப்பட்டவா்கள் நீதிமன்றில் முன்னிலை
சப்புகஸ்கந்த பகுதியில் வீசப்பட்ட நிலையில், பயணப்பையில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனா்.
காவல்துறையின் பேச்சாளா் நிஹால் தல்துவ இதனை எமது செய்திச்சேவையிடம் தொிவித்தாா்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடா்பில் நேற்று முன்தினம் பெண் ஒருவா் உட்பட்ட இருவா் கைதுசெய்யப்பட்டனா்.
இவா்கள் இருவரும் மட்டக்குளியப் பகுதியைச் சோ்ந்தவா்களாவா்.
குறித்த பெண் காணாமல் போவதற்கு முன்னா் அவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் ஒரே முச்சக்கர வண்டியில் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனடிப்படையிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனா்.
கடந்த தீபாவளித் தினத்தன்று பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னா் இடம்பெற்ற விசாரணையின்போது அவா் மாளிகாவத்தைப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது தொியவந்தது.