வீடொன்றில் எரிந்த நிலையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு
பொலன்னறுவை - மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் எரிந்த நிலையில் வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
வயோதிபப் பெண் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.
கட்டிலுக்கு அருகிலிருந்த சடலம்
இதனால் பிரதேசவாசிகளும், வயோதிபப் பெண்ணின் மகளும் குறித்த வீட்டிற்குள் சென்று சோதனையிட்ட போது கட்டிலுக்கு அருகில் வைத்து சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலமானது இன்று (22) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
