புதுக்கடை துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி: அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு
புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பிரபுக்கள் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி ஜனாதிபதி முதல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையிலும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளது.
காலத்திற்கு காலம் மீளாய்வு
பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் காலத்திற்கு காலம் மீளாய்வு செய்வதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் பிரபுக்களுக்கு பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொருத்தமான நடவடிக்கை
இந்த கோரிக்கை குறித்து பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததாக சபாநாயகர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு இன்றி பயணங்களை மேற்கொள்வதாகவும், அவர்கள் பொலிஸ் பாதுகாப்பினை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய பலர் தற்பொழுது சாதாரண சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |