நாட்டின் நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!
இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20ம் திகதி நீர் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தியானது தேசிய மின்சார தேவையில் 21 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மின்சார உற்பத்தி
இலங்கை மின்சாரசபையின் மொத்த மின் உற்பத்தியில் இவ்வாறு 21 வீதமாக குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடையும் மின்சார உற்பத்தியை ஈடு செய்வதற்கு எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகரிக்க நேரிட்டுள்ளது.
இதன்படி கடந்த 20ம் திகதி, அனல் மின் மற்றும் டீசல் மூலமான மின் உற்பத்தியானது தேசிய மொத்த மின் தேவையின் 65 வீத அளவினை நிரம்பல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.