தயாசிறி ஜயசேகர கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரது தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி கட்சியின் பதில் பொதுச் செயலாளராக பிரதி பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்(Video)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்ற கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் தயாசிறி ஜயசேகர பங்கேற்றிருக்கவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் தயாசிறி ஜயசேகரவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் தயாசிறி ஜயசேகர எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
