புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் தயாசிறி ஜயசேகர
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த புதிய அரசியல் கூட்டணி அதிகாரபூர்வமாக பணிகளை ஆரம்பிக்க உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் மனிதாபிமான மக்கள் கூட்டணி என்ற பெயரில் இந்த புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இணைவு
பதிவு செய்யப்பட்ட பதினெட்டு அரசியல் கட்சிகள் இந்த கூட்டணில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக சுமார் 40 சிவில் அமைப்புக்களும் இந்த கூட்டணிக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக் கெள்ளும் பிரதான கட்சிக்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் தயாசிறி ஜயசேகர போட்டியிடுவார் எனவும் புதிய கூட்டணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
