யாழில் மனைவியின் கண்ணெதிரே கணவன் கொலை: கடற்படையின் விசேட உத்தரவு
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின்போது கடற்படையினர் ஏதேனும் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கடற்படையினர்
கடந்த மார்ச் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை கடற்படை முகாமிற்கு அருகில் ஒரு தம்பதியினர் கொடூரமாக தாக்கி கடத்திச் செல்லப்பட்ட நிலையில், கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதன்போது குறித்த தம்பதியினர் பாதுகாப்பு தேடி கடற்படை முகாமுக்குள் சென்றவேளை அவர்களை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
அத்துடன் வன்முறைக்குழுவினர் அவர்களை கடத்திச்செல்வதை தடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |