அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த அரசாங்கம்
அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் சீனா இராணுவ முகாம் ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலாய்வுப் பிரிவு தெரிவித்திருந்தது.
எனினும், இந்த தகவல் பிழையானது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எல்லைப் பகுதியில் வெளிநாட்டு இராணுவ முகாம்களை அமைப்பது குறித்து சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அறிக்கை பிழை
அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு 2024ம் ஆண்டுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சீனா இராணுவ முகாம்களை அமைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைகயில் சீன இராணுவ முகாம் குறித்த அமெரிக்காவின் அறிக்கை பிழையானது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
[93FMWKZ[