கச்சத்தீவு திருவிழாவிற்கான திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் திருவிழா நடைபெறவுள்ளது.
திருவிழா
இந்த முறையும், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு இலங்கை கடற்படை மனிதவளம், தொழில்நுட்பம் மற்றும் வளங்களை பங்களிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இந்த திருவிழா, யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும்.
இந்த தேவாலயம் நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது.
சுமார் 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சிறிய தீவு, இலங்கையிலிருந்து மிகத் தொலைவில் உள்ள தீவாகவும், இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள தீவாகவும் கருதப்படுகிறது.

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
