சம்பத் மனம்பேரி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி, அவரிடமிருந்து அரிசி ஏற்றிச் சென்ற பாரவூர்தியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவல முன்னிலையில் இன்று(03.11.2026) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக
சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஏற்றிச் சென்ற பாரவூர்தி, பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றைக் கொள்ளையிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பத் மனம்பேரி, நிரஞ்சன் பெரேரா உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரால் ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.