"கிரிக்கெட் வீரர் தனுஷ்க பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமரசம் செய்து கொள்ள முயற்சி"
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமரசம் செய்து கொள்ள முயற்சிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் சட்டப்பிரிவு தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குணதிலக்கவிற்கு பிணை வழங்குவதற்கு அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேனாரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
எவ்வாறாயினும், குணதிலக்கவிற்கு பிணை வழங்குவதற்கு தேவையான நிதியை இலங்கை கிரிக்கெட் சபையால் திரட்ட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குணதிலக்கவின் பிணையை செலுத்துவதற்கு கிரிக்கெட் வீரர் வனிது ஹசரங்க நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை குணதிலக்க கைது செய்யப்பட்டார்.
இருப்பினும் சிட்னி நீதவான் ரொபர்ட் வில்லியம்ஸ், குணதிலக்கவின் பிணையை மறுத்ததுடன் , வழக்கை ஜனவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவை அனைத்து
வகையான கிரிக்கெட்டிலிருந்தும், இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளது.