இலங்கையின் கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பெண்ணின் கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டு
இலங்கையின் கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க பலவந்த பாலியல் உறவின்போது அவுஸ்திரேலிய பெண்ணின் கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும், இதன் காரணமாக மூளையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், மருத்துவமனையில் பெண்ணின் மூளை ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

குவியும் குற்றச்சாட்டுக்கள்

பாலியல் உறவின்போது ஒரு கட்டத்தில், அந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், இதனையடுத்து அவர் மறுநாள் காலை ஒரு ஆலோசனை சேவையை அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனுஷ்க குணதிலக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரின் வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri