வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ள ஆபத்தான நபருக்கு தென்னிலங்கையில் காத்திருந்த அதிர்ச்சி
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலக குழுவின் தலைவரான அஹுங்கல்ல பாபாவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
காலி, அஹுங்கல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த 2 மாடி வீடு நேற்று(18.09.2025) அதிகாலை ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் வீட்டின் சமையலறை முழுவதும் சேதமடைந்துள்ளது. எனினும் தீ விபத்தினால் வீடு பாரியளவில் சேதமடையவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
அஹுங்கல்ல பாபா மீது பல கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்து அந்த குழுக்களில் ஒன்றின் வேலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அஹுங்கல்ல பாபாவுக்கு பல எதிரிகள் உள்ளமையினால் இவ்வாறு சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
