வெளிநாட்டிலிருந்து வந்த கணவனின் வெறிச்செயல் - 33 வயதான மனைவிக்கு நேர்ந்த கதி
கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் நேற்று மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
மீரிகம ரெண்டபொல பகுதியில் வீட்டிற்கு அருகில் 33 வயதான தக்சிலா தில்ருக்ஷி எனப்படும் 2 பிள்ளைகளின் தாயே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
நேற்று மதியம் தனது வீட்டிற்கு அடுத்த வீட்டின் முற்றத்தில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்த நிலையில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நாடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam