மகிந்தவின் 50 ஆண்டுகால நட்பு.. தேடிச் சென்ற முன்னாள் பிரதம நீதியரசர்
தனக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நட்பு இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க நேற்று (18) தங்காலைக்கு சென்றிருந்த நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "மகிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. அதனை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
கதிர்காம பாதயாத்திரை
நாட்டைக் காப்பாற்றிய தலைவர் இவ்வாறு நடத்தப்பட்டதற்கு வருத்தப்படுகிறேன். கதிர்காம பாதயாத்திரை குறித்து மகிந்த ராஜபக்ச எனக்கே முதலில் தெரிவித்தார்.
மொரட்டுவவுக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார் என்றும், தாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் மகிந்தவிடம் நான் கூறினேன்.
எனினும் ஜே.வி.பிக்கு ஆதரவாக மகிந்த ராஜபக்ச கதிர்காமத்திற்குச் சென்றதாகவும், ஜே.வி.பி அரசாங்கமே மகிந்த ராஜபக்சவை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளமை வருத்தமளிக்கிறது. நான் மகிந்த ராஜபக்சவுக்காக நிற்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
