செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சமூக சேவையை பாராட்டி கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அண்மையில் செந்தில் தொண்டமான் தொழிற்சங்க மகாநாட்டிற்கு சென்றிருந்த வேலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.
செந்திலுக்கு பாராட்டு
தீ விபத்தின் போது ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் செந்தில் தொண்டமான் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு பாராட்டு தெரிவித்தே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதனை செந்தில் தொண்டமான் தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். மதிப்பிற்குரிய அண்ணன் மு.க. ஸ்டாலினின் பாராட்டுக் கடிதம் எனக்குப் பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளித்தது.
“மானுடத்தின் மீதான பெருங்கருணையே இக்கட்டான தருணங்களில் துணிவாக வெளிப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்த அவரின் வரிகள் என் சமூக சேவைப் பணிகளுக்கு ஒரு புதிய உந்துசக்தியைக் கொடுத்துள்ளது.
தாங்கள் என் சேவையை அங்கீகரித்து எழுதிய பாராட்டு கடிதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் தொண்டமானுக்கு பா.ஜ.க.வின் துணைத் தலைவரான அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
