ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் இன்று(19.09.2025) அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலும் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்திலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், அதைத் தொடர்ந்து 5.8 ரிக்டர் அளவு வரை தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் திகதியன்று
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
No damage has been reported following a powerful earthquake that struck Russia's Kamchatka Peninsula, regional authorities said.#Russia #Kamchatka #earthquakes pic.twitter.com/U5FNxMKMOv
— 鳳凰資訊 PhoenixTV News (@PhoenixTV_News) September 19, 2025
இதன்படி கடந்த 5ஆம் திகதியன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வை அடுத்தும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



