பாரிஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த கொடூரம் - மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் குடும்ப முரண்பாடு காரணமாக தந்தை ஒருவரால் மகன் படுகொலை செய்தமை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
பாரிஸின் புறநகர் பகுதியான செய்ன்-சன்-துனி மாவட்டத்திற்கு Villemomble பகுதியில் இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அங்குள்ள வீடு ஒன்றில் கெவின் என அழைக்கப்படும் ஏழு வயது சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சோபா இருக்கையில் சடலமாக கிடந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
தலையில் சுடப்பட்டு சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 34 வயதுடைய சிறுவனின் தாயார் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் சடலத்தை கண்டு அதிர்ச்சியில் பொலிஸாரை அழைத்துள்ளார்.
விசாரணைகளை தொடர்ந்த அதிகாரிகள், வீட்டின் மற்றுமொரு அறையில் சிறுவனின் தந்தை தற்கொலைக்கு முயன்ற நிலையில் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டார். 36 வயதுடைய சிறுவனின் தந்தை தற்போது தீவிர சிகிச்ச்சைப் பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
குறித்த தந்தையே மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தந்தை இம்மாத ஆரம்பத்திலேயே சிறையில் இருந்து விடுதலையாகியிருந்தார்.
மனைவியுடனான குடும்ப தகராரின் முடிவிலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இந்த தம்பதி ஒரே வீட்டில் வாழ்ந்த போது தொடர்ந்து தகராரில் ஈடுபடுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். மனைவியை வேதனைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் மகனை கொலை செய்துள்ளதாக அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மகனை கொலை செய்தால் நிச்சயமாக மனைவி வேதனைப்படுவார். அது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த சம்பவத்தை அவர் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான காரியத்தை செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.