இலங்கையில் முடக்க நிலையை தளர்த்தினால் ஏற்படவுள்ள ஆபத்து - எச்சரிக்கும் சர்வதேச அறிக்கை
எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையில் முடக்க தளர்த்தப்படட்ட பின்னர் மரணங்களின் எண்ணிக்கை 16,700 வரை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மூடப்பட்ட காலகட்டத்தில் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் 1.1 பில்லியன் டொலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 வீதம் என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
எனினும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி வரை முடக்கநிலையை நீடிப்பதன் மூலம் இறப்பு எண்ணிக்கையை 13,712 ஆகக் குறைக்க முடியும். ஆனால் 1.67 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு கணித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை முடக்கநிலையை நீட்டிப்பதனால் 2.2 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும், ஆனால் மொத்த இறப்பு எண்ணிக்கையை 10,400 ஆக குறைக்க முடியும்.
கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒகஸ்ட் 30ஆம் திகதிக்கு மேல் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் இன்றையதினம் முடிவை அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் வெபினார் மூலம் இலங்கை தொடர்பான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான நேற்றைய கலந்துரையாடலில் இலங்கை பேராசிரியர்கள் உட்பட உலகின் பல நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் இணைய வழி காணொளி மூலம் இணைந்து கொண்டிருந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening