முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்த மரம்(Photos)
முல்லைத்தீவு திருகோணமலை வீதியில், முல்லைத்தீவில் இருந்து 1.1 km தூரத்தில் பிரதான வீதியின் கிழக்கே திரும்பி 75 m தூரம் பயணிக்கும் போது மு/கள்ளப்பாடு அ.த.க பாடசாலை வருகின்றது.
பாடசாலை சந்தியில் சரிந்து விழும் நிலையில் இருந்த பட்ட மரம்(உயிரிழந்த மரம்) நேற்று வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணியாளர்களால் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பான வீதி போக்குவரத்து
அண்மையில் கொழும்பில் பேருந்து மீது மரம் சாய்ந்து விழுந்ததினால் ஏற்பட்ட விபரீதம் தொடர்ந்து நிகழாதிருப்பதற்காக அரசாங்கத்தினால் வீதிகளில் பயணிகளுக்கு ஆபத்தாக இருக்கும் எல்லா மரங்களையும் அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இந்த பட்ட மரத்தினை வெட்டி அகற்றுவதாக செயற்பாட்டை நெறிப்படுத்தி மேற்பார்வை செய்யும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரி சபேஸ் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சூரை எனப்படும் உயர்ந்து வளரும் சிவப்பு பழத்தைக் கொண்ட வலிய தணாடுடைய தாவரங்கள் இரண்டு நிற்கின்றன.
அதில் ஒரு மரம் பட்டு அதன் இறந்த தண்டின் நடுவைரம் உக்கலடைந்து விழும் நிலையில் இருந்தது.அதனால் அந்த மரமும் அகற்றப்பட வேண்டும் என எண்ணியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் கருத்து
பாடசாலையின் சந்தியில் இந்த மரம் நிற்பதனால் பாடசாலைக்கு சென்று வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் அச்சத்துடனேயே பயனப்பட்டு வந்துள்ளனர்.
குறித்த மரம் வெட்டி அகற்றப்படும் போது அச்சமின்றி பயணிக்க முடியும் என பாடசாலை மாணவியொருவரின் தாயார் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த சந்தியில் பேருந்துக்காக காத்திருக்கும் போது மரத்திற்கு அருகில் நிற்பதில்லை என மாணவனொருவர் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பல வீதிகளில் இவ்வாறான மரங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.








Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
