அடுத்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள பிரபல கோடீஸ்வரர்! சிங்கள ஊடகம் தகவல்
இலங்கையின் முதல்நிலை கோடீஸ்வரர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21 ஆம் திகதி) நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அன்றைய தினம் அல்லது 23ஆம் திகதி புதிய அமைச்சராகவும் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டுள்ளமைக்கு எதிராக உயர் நிதிமன்றில் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தினால் அடிப்படை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் உள்ளடங்கியுள்ள விடயம்
குறித்த மனுவில் அரசியலமைப்பின் 99 ஏ பிரிவின் படி அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரையே தேசியப்பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யமுடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பேரேரா பெயரிடப்பட்டுள்ளமை அரசியலமைப்புக்கு முரனானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.