காசாவில் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க 2040 வரை ஆகும் : ஐ.நா தகவல்
இஸ்ரேல்(Israel) தாக்குதலில் காசாவில்(Gaza) பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதற்கு 2040 வரை ஆகும் என ஐ.நா(United Nations) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
ஐ.நா. வலியுறுத்து
250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ரஃபா நகரைத் தவிர மற்ற நகரங்கள் ஏறக்குறைய சீர்குலைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது முகாம்களில் வசித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஐ.நா. முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மனிதாபிமான உதவிகள் கிடைக்க இஸ்ரேல் உதவ வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ஐ.நா. உள்ளிட்டவைகளின் வலியுறுத்தலின்படி நேற்று முன்தினம் இஸ்ரேல் வடக்கு காசாவிற்கான ஒரு எல்லையை திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |