கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்கள்
கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக குறி வைத்து பல்வேறு மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த 27 வயதான லக்க்ஷாந்த் செல்வராஜா, 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கை
சந்தேக நபர்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் போல நடித்து தொலைபேசி அழைப்புகளைப் ஏற்படுத்தி உரியவர்களது கணக்குகள் மோசடி செய்துள்ளனர்.

குறித்த இரண்டு தமிழர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இருந்தால் தகவல் தருமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.
எனினும் குறித்த இருவருக்கும் எதிராகவும் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri