மனித நுகர்விற்கு ஒவ்வாத பழுதடைந்த மீன் வகைகள் பொலிஸாரால் மீட்பு
மீட்கப்பட்ட மீன் வகைகள்
மனித நுகர்விற்கு ஒவ்வாத பழுதடைந்த மீன் வகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சிலாபம் பகுதியிலிருந்து நீர்கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட 5670 கிலோகிராம் எடையுடைய பழுதடைந்த மீன்களே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஶ்ரீனிக ஜயகொடிக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த மீன் வகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பழுதடைந்த மீன்கள்
குறித்த மீன் வகைகள் எந்த இடத்திலிருந்து ஏற்றப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதற்கு முன்னரும் பழுதடைந்த மீன் வகைகளை கொழும்பு துறைமுகத்திலிருந்து வர்த்தகர் ஒருவர் கொண்டு சென்றிருந்தார் என்பதுடன், அந்த மீன்களில் ஒரு தொகுதியா இவை என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மீன் ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் கைப்பற்றியதுடன், வாகன சாரதியையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.