மீன் வகைகளின் விலைகள் மேலும் உயர்வு
மீன் வகைகளின் விலைகள் மேலும் உயர்வடைந்துள்ளதாக பெஹலியகொட மீன் சந்தை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட தொகைகளுக்கும் கூட கடற்தொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படாத காரணத்தினால் கடற்தொழிலாளர்களினால் கடற்றொழிலில் ஈடுபட முடியவில்லை.
மீன் கையிருப்பு வீழ்ச்சி
இதனால் மீன் கையிருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மீன்களின் மொத்த விற்பனை விலை 100 முதல் 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போதியளவு மீன்கள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினை

இந்த பருவ காலத்தில் கூடுதல் அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற போதிலும், எரிபொருள் பிரச்சினையால் கடற்தொழிலாளர்களுக்கு கடலுக்குச் செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்
காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து