எகிறும் மீன்களின் விலை: ஏமாற்றத்துடன் வீடு செல்லும் மக்கள் (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து தொழிற் துறைகளுமே பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் கடற்றொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமானது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதற்கு மண்ணெண்ணெய் அதிகமாக தேவைப்படுவதனால் தற்போது கடற்றொழில் ஈடுபடுவது மிகவும் குறைவடைந்துள்ளது.
இதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தையில் மீன்களுக்கான கேள்வி அதிகரிக்கப்படுவதோடு மீன்களின் விலைகளும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டுவதில்லை. அதிலும் மீன்களை கொள்வனவு செய்யும் மக்களும் தங்களது தேவைகளுக்கு குறைவான வகையிலே மீன்களை கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மீன்களின் விலை அதிகரிப்பு குறித்து சாதாரண மக்கள் அதிருப்தி தெரிவிப்பதை போலேவே மீன் வியாபாரிகளும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் எமது செய்திசேவை பேலியகொட மீன் சந்தையில் பதிவு செய்த காட்சிகளே இவை.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
