பத்தேயம குளத்தின் அணை உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம்! நீரில் மூழ்கிய வீடுகள் - மக்கள் தத்தளிப்பு
நாட்டில் நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக பத்தேயம குளத்தின் அணை உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம் புத்தளம் - மதுரங்குளி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்ததில் 15 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
நேற்று மாலை 5.30 மணியளவில் பெய்த பலத்த மழை காரணமாக பத்தேயம குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
அணையை தற்காலிகமாக புனரமைக்க நடவடிக்கை
இதனால் நீர் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் குளத்தின் அணைப்பகுதி சுமார் 15 அடி நீளத்திற்கு உடைந்து நீர் பெரும் வேகத்துடன் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.

இதன் காரணமாக குளத்தைச் சூழவுள்ள சுமார் 15 வீடுகள் ஒரு அடிக்கும் மேலான வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் வீடுகளிலிருந்த பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குளத்து நீரை வெளியேற்றி, உடைந்த அணையைத் தற்காலிகமாகப் புனரமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.