அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை ஆட்சேபித்து இந்தியரின் மனுவை நிராகரித்த செக் குடியரசு
இந்தியாவுக்கு(India) எதிராக செயற்பட்டு வரும் காலிஸ்தானிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்க(United States) மண்ணில் வைத்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இந்திய நாட்டவர் தாக்கல் செய்த மனுவை செக் மக்கள் குடியரசின்(Czechia) அரசியமைப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ப்ராக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான நிகில் குப்தாவின் மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
அமெரிக்க மற்றும் கனேடிய இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்ட காலிஸ்தானிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்தவதற்காக, செயல்பட்டதாக நிகில் குப்தா மீது அமெரிக்க அரச சட்டத்தரணிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செக் குடியரசில் கைது செய்யப்பட்ட நிக்கில் குப்தாவை அமெரிக்காவிடம் கையளிக்க செக் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு செக் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றும் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.
இதனை தடுக்கும் வகையிலேயே நிக்கில் குப்தாவின் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், ஒப்படைப்பு ஏற்கத்தக்கது என்று அறிவிப்பது, நாட்டின் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மீறுகிறது என்பதற்கான எந்த சூழ்நிலையையும் காணவில்லை என்று செக் அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது
இந்த தீர்ப்பு காரணமாக நிக்கில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் செக் குடியரசின் செயற்பாடுகளுக்கு வழி திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய அரசாங்கத்தின் இராஜதந்திர முயற்சிகளுக்கு இது பின்னடைவான விடயமாகவும் கருதப்படலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
you may like this