அர்னாப் புயலின் தாக்கம் : புத்தளத்தில் அதிகபட்ச மழை பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ள நிலையில் புத்தளம் மாவட்டத்தின் கரண்டிபோவல் பகுதியில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் தகவல்படி, கரண்டிபோவலில் 195.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இலங்கையை மறைமுகமாகப் பாதிப்பு
மேலும், குளியாபிட்டியா மற்றும் இலுப்பைக்கடவையில் முறையே 193.0 மி.மீ மற்றும் 187.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் 'அர்னாப்' புயல் உருவாகி, இலங்கையை மறைமுகமாகப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, மேற்கு, சபரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அனுராதபுர மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan